செய்திகள்
கன்னியாகுமரி கடற்கரை

கன்னியாகுமரியில் 10 இடங்களில் அதிநவீன சுழலும் கண்காணிப்பு கேமரா

Published On 2019-11-08 09:21 GMT   |   Update On 2019-11-08 09:21 GMT
சீசன் காலங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க கன்னியாகுமரியில் 10 இடங்களில் அதிநவீன சுழலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி:

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலம் ஆகும்.

இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றாலும், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மட்டுமின்றி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு முக்கிய சீசன் காலங்களாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் ஜனவரி 20-ந்தேதி வரை 60 நாட்கள் நீடிக்கிறது.

இந்த சீசன் காலங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு போன்ற சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

இதனை கண்காணித்து தடுக்கும் பொருட்டு முதற்கட்டமாக கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, மாதவபுரம் சந்திப்பு ஆகிய இடங்களில் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. அடுத்தகட்டமாக மேலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Tags:    

Similar News