செய்திகள்
சரிதா நாயர்

கோவை கோர்ட்டில் சரிதாநாயர் மேல்முறையீட்டு மனு தாக்கல்

Published On 2019-11-07 04:36 GMT   |   Update On 2019-11-07 04:36 GMT
காற்றாலை மோசடி வழக்கில் வழங்கப்பட்ட 3 ஆண்டு தண்டனையை எதிர்த்து, கோவை கோர்ட்டில் சரிதா நாயர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை:

கேரளாவை சேர்ந்த நடிகை சரிதா நாயர். இவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் மேலாளர் ரவி ஆகியோர் கோவையில் சோலார் பேனல் மற்றும் காற்றாலை மின் உபகரணங்கள் வினியோகிக்கும் நிறுவனம் நடத்தி வந்தனர்.

மின் உபகரணங்கள் சப்ளை செய்வதாக கூறி, கோவை ரேஸ்கோர்சை சேர்ந்த தியாகராஜன். ஊட்டியை சேர்ந்த சோதினா கிளாசந்த் உள்ளிட்ட நான்கு பேரிடம் ரூ.44 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கு கோவை ஜே.எம். கோர்ட்டில் நடந்தது வந்தது.

அரசு தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து 3 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த 30-ந் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

மேல் முறையீடு செய்வதற்கு நவ.14 வரை அவகாசம் அளிக்கப்பட்டு 3 பேர் மீதான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தண்டனையை எதிர்த்து கோவை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் சரிதா நாயர் தரப்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News