செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது

Published On 2019-10-31 04:16 GMT   |   Update On 2019-10-31 04:16 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 25 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 15 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 25 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 15 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் நேற்று 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாகவும், கால்வாயில் 600 கன அடியில் இருந்து 400 கன அடியாகவும் குறைக்கப்பட்டது.

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதால் நீர்மட்டம் 120 அடியாகவே நீடிக்கிறது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும்பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிய வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News