செய்திகள்
கொடைக்கானல் நகரப்பகுதியில் புகுந்த காட்டெருமைகள்

கொடைக்கானல் நகரப்பகுதியில் புகுந்த காட்டெருமைகள் - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

Published On 2019-10-23 05:46 GMT   |   Update On 2019-10-23 05:46 GMT
கொடைக்கானல் நகருக்குள் புகும் காட்டெருமைகளை முழுமையாக வனப்பகுதியிலிருந்து வெளியில் வரவிடாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொடைக்கானல்:

சுற்றுலா தலமான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கொடைக்கானல் பகுதியில் அடிக்கடி காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக உலா வருவது வழக்கம். இந்த நிலையில் மழை காரணமாக கடந்த சிலநாட்களாக காட்டெருமைகள் நகருக்குள் வருவது குறைந்திருந்தது.

இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் அன்றாடம் பெய்துவந்த மழையும் காணாமல் போனது. மழை குறைந்ததால் மீண்டும் மாலை நேரங்களில் காட்டெருமைகள் நகருக்குள் புகுந்தன. பேருந்து நிலையப்பகுதியிலிருந்து வெளியே வந்த காட்டெருமைகள் தனது குட்டியுடன் ஏழுரோடு பகுதியில் வலம் வந்தன.

இதனால் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்தனர். சிலர் காட்டெருமைகளை தங்கள் மொபைலில் படமெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

இருப்பினும் வனத்துறையினர் இதுபோல் நகருக்குள் புகும் காட்டெருமைகளை முழுமையாக வனப்பகுதியிலிருந்து வெளியில் வரவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News