செய்திகள்
வைர ஒட்டியாணம்

மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர ஒட்டியாணம் காணிக்கை

Published On 2019-10-19 03:37 GMT   |   Update On 2019-10-19 03:37 GMT
சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வைர ஒட்டியாணத்தை காணிக்கையாக வழங்கினார்.
மதுரை:

சென்னையைச் சேர்ந்த பக்தர் தனது குடும்பத்தினருடன் நேற்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவர், மீனாட்சி அம்மனுக்கு வைர ஒட்டியாணத்தை காணிக்கையாக வழங்கினார். அதனை மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் நடராஜன் பெற்றுக்கொண்டார். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதால் மீனாட்சி அம்மனுக்கு காணிக்கையாக வைர ஒட்டியாணம் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஒட்டியாணம் 180 கிராம் தங்கம், 15 கேரட் வைரக்கற்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 11 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ஆகும். திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் இந்த வைர ஒட்டியாணம் அம்மனுக்கு சாற்றப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News