செய்திகள்
திருவள்ளூரில் ஆய்வு நடத்தியபோது எடுத்த படம்

டெங்கு கொசு உற்பத்தி - திருவள்ளூரில் 63 பேருக்கு ரூ.2  1/2 லட்சம் அபராதம்

Published On 2019-10-18 09:27 GMT   |   Update On 2019-10-18 09:27 GMT
டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகக்கூடிய வகையில் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 63 பேருக்கு ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 700 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகக் கூடிய வகையில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள், நிறுவனங்களை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டார்.

அதன் பேரில் நகராட்சி கமி‌ஷனர் மாரிச்செல்வி தலைமையில் வீடு, கடைகள், ஓட்டல்கள், வணிக கட்டிடங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சோதனை நடத்தினர்.

இன்று சி.வி. நாயுடு சாலையில் உள்ள கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி கமி‌ஷனர் மாரிச்செல்வி, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகக் கூடிய வகையில் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் வீட்டின் உரிமையாளருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தார்.

அதே போல் ஜெயா நகரில் வீடு வீடாக சென்று செய்த சோதனை நடத்தப்பட்டது. டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகக்கூடிய வகையில் இருந்த வீடுகளுக்கு ரூ. 500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுவரை திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 63 பேருக்கு ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 700 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின்போது சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், என்ஜினீயர் செல்வகுமார், சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், ரமேஷ் மற்றும் கொசு ஒழிப்பு ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் உடன் சென்றனர்.


Tags:    

Similar News