செய்திகள்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து நின்று நான் வெற்றி பெறுவேன்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published On 2019-10-18 05:23 GMT   |   Update On 2019-10-18 05:23 GMT
தமிழக முதல்வர், துணை முதல்வர் உத்தரவிட்டால் தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து நின்று நான் வெற்றி பெறுவேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
களக்காடு:

களக்காடு ஒன்றியம் கருவேலங்குளம் கிராமத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் மக்களிடையே பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. அரசிற்கு ஆதரவாக மக்கள் விழிப்போடு இருக்கின்றனர். 2 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க.விற்கு வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். ஸ்டாலினை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தான் நிற்க வேண்டுமா. தமிழக முதல்வர், துணை முதல்வர் உத்தரவிட்டால் நான் உட்பட யார் வேண்டுமானாலும் ஸ்டாலினை எதிர்த்து நின்று வெற்றிபெறுவோம்.

கனிமொழியை தான் பிரச்சாரக்குழு செயலாளராகவும், ஐ.பெரியசாமியை தலைவராகவும் தி.மு.க நியமித்துள்ளது. ஆனால் திடீரென கனிமொழி வெளிநாட்டிற்கு சென்று விட்டார்.

கனிமொழியை அரசியலில் இருந்து ஒதுக்குகின்றார்களா, அல்லது தி.மு.க.வில் கனிமொழி வளர்ச்சி கண்டு ஸ்டாலின் பயப்படுகிறாரா. தி.மு.க.விற்கு 73 வயதாகி விட்டது. அந்த கட்சி வீட்டில் தான் உட்கார வேண்டும். மற்ற கட்சிகள் எல்லாம் இப்போது தான் தவழ்ந்து நடந்து வருகின்றது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. கருத்து கணிப்பு இந்த தேர்தலில் எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News