செய்திகள்
முருகன்

திருச்சி நகைக்கடை கொள்ளை - முருகனை மேலும் 11 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு

Published On 2019-10-16 06:57 GMT   |   Update On 2019-10-16 06:57 GMT
திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய முருகனை மேலும் 11 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
திருச்சி:

திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி சுவற்றை துளையிட்டு 16 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக 7 தனிப்படை அமைத்து திருச்சி போலீசார் தேடிய நிலையில் முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகன் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனை அடுத்து முருகனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து பெங்களூருவை அடுத்த பொம்மனஹள்ளி போலீசார் மற்றொரு வழக்கில் விசாரிக்க நீதிமன்றத்தில் இருந்து போலீசார் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அவனது காவல் முடிவடைந்ததை தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய பெங்களூரு போலீசார் மேலும் 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளனர். இந்த மனு மீது விரைவில் நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார்.

கர்நாடக மாநிலத்தில் மட்டும் முருகன் மீது 115 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News