செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள்.

சென்னையில் பான்பராக்-குட்கா, போதை சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது

Published On 2019-10-16 05:36 GMT   |   Update On 2019-10-16 05:36 GMT
சென்னையில் பான்பராக்- குட்கா மற்றும் போதை சாக்லெட்டுகளை விற்பனை செய்வதற்காக ரெயிலில் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

ஒடிசாவில் இருந்து ஹவுரா ரெயில் மூலம் போதை சாக்லெட்டுகள் கடத்தி வரப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து எழும்பூர் போலீசில் சேட்டு தலைமையிலான போலீசார் எழும்பூர் ரெயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ரெயில் நிலையத்தில் இருந்து வெளியில் வந்த 3 பேர் சிறிய மூட்டைகளை கையில் எடுத்துக்கொண்டு வந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து மூட்டைகளை சோதனையிட்டபோது அதில் சாக்லெட்டுகள் இருந்தன. குட்கா பாக்கெட்டுகளும் இருந்தது.

இதுதொடர்பாக ஒடிசாவை சேர்ந்த பிரகாஷ் பிரதான், ருதுஹெம்ப்ராம் ஆகியோர் பிடிபட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சாக்லெட்டுகள் அனைத்தும் பான்பராக் மற்றும் குட்கா பொருட்களால் தயாரிக்கப்பட்டதென்று தெரியவந்தது. தப்பி ஓடிய மானஸ் என்பவரை போலீசார் தேடி வந்தனர். அவரும் நேற்று இரவு பிடிபட்டார்.

இந்த போதை சாக்லெட்டுகளை அடிக்கடி 3 பேரும் சென்னைக்கு கடத்தி வந்து விற்பனை செய்து இருப்பது தெரியவந்தது. சென்னையில் பணிபுரியும் வடமாநில வாலிபர்களுக்கு இதனை சப்ளை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைதான 3 பேரும் பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தனர். சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பும் போதுதான் சாக்லெட்டுகளை கடத்தி வந்து போலீசில் சிக்கி உள்ளனர்.
Tags:    

Similar News