செய்திகள்
கோப்புப்படம்

கோவையில் இருந்து பழனி, பொள்ளாச்சிக்கு புதிய பயணிகள் ரெயில்

Published On 2019-10-15 11:52 GMT   |   Update On 2019-10-15 11:52 GMT
கோவையில் இருந்து பழனி மற்றும் பொள்ளாச்சிக்கு புதிய பயணிகள் ரெயில் சேவையை இன்று மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்து தொடங்கி வைத்தார்.
கோவை:

இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்திய ரெயில்வே 10 முக்கிய இடங்களில் ரெயில் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டது. அதன்படி தெற்கு ரெயில்வேயில் 3 ரெயில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இந்த புதிய பயணிகள் ரெயில் சேவையை இன்று மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்து தொடங்கி வைத்தார்.

தொழில் நகரமான கோவையில் 2 ரெயில்கள் இயக்கப்படுகிறது. அவை கோவை பழனி, பொள்ளாச்சி கோவை, சேலம் கரூர். இதில் கோவை-பழனி இடையே வாரத்தின் 7 நாட்களும் மதியம் 1.45 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பழனி ரெயில் நிலையத்துக்கு மாலை 4.40 சென்றடையும்,

அந்த ரெயில் மறுநாள் காலை பழனியில் இருந்து கோவைக்கு காலை 10.45 மணிக்கு தினசரி பயணிகள் ரெயிலாக இயக்கப்படும், பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் காலை 7.30 மணிக்கு பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.40 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை வந்தடையும்,

மறுநாள் காலை 5.45 மணிக்கு இந்த ரெயில் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு புறப்பட்டு செல்லும்.
Tags:    

Similar News