செய்திகள்
பலியான சங்கீதா.

திருத்தணி அருகே மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலி

Published On 2019-10-14 07:03 GMT   |   Update On 2019-10-14 07:03 GMT
திருத்தணி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர்:

திருத்தணியை அடுத்த அருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி சங்கீதா (21).

கடந்த வாரம் சங்கீதாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதையடுத்து அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது நிலைமை மோசமடைந்தது.

இதையடுத்து சங்கீதாவை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவு உள்ளது. மர்ம காய்ச்சலாலும், டெங்கு காய்ச்சலாலும் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் காரணமாக 117 பேர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களது ரத்தத்தை பரிசோதனை செய்ததில் 18 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 7 பேருக்கு டெங்கு அறிகுறியும் இருப்பது தெரியவந்தது.
Tags:    

Similar News