செய்திகள்
சுபஸ்ரீ மரணம்

சுபஸ்ரீ மரணம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு தந்தை ஐகோர்ட்டில் மனு

Published On 2019-10-09 12:35 GMT   |   Update On 2019-10-09 12:35 GMT
பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீயின் இறப்புக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டுமேன அவரது தந்தை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை:

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த மாதம் 12-ம் தேதி அ.தி.மு.க.வினர் வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியானார்.

மோட்டார்சைக்கிளில் சுபஸ்ரீ சென்ற போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறிய சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி அவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றுவருகிறது.



இந்நிலையில், சுபஸ்ரீயின் தந்தை ரவி ஐகோர்ட்டில் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார். அதில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசு தங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிடக் கோரியுள்ளார்.

மேலும், அந்த மனுவில் சுபஸ்ரீயின் இறப்பை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கவும், பேனர் வைப்பதை தடுக்க கடுமையான சட்டம் இயற்றவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News