செய்திகள்
முல்லைப் பெரியாறு அணை (கோப்புப்படம்)

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய துணைக்குழு ஆய்வு

Published On 2019-10-04 07:12 GMT   |   Update On 2019-10-04 07:12 GMT
தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் மத்திய துணைக்குழு இன்று ஆய்வு நடத்தினர்.
கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை வருகிற 20-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவும், தீவிரம் அடையும் சமயத்திலும் துணைக்குழு பார்வையிட்டு அது குறித்த அறிக்கையை மூவர் குழுவிற்கு அனுப்புவது வழக்கம். அதன்படி மத்திய துணைக்குழு தலைவரான மத்திய நீர்வள ஆணையத்தின் செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் இரு மாநில பிரதிநிதிகள் அடங்கிய ஆய்வுக்குழு முல்லைப்பெரியாறு அணைக்கு வந்தனர்.

தமிழக அரசின் பிரதிநிதிகளாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன், பெரியாறு அணையின் உதவி கோட்ட பொறியாளர் சாம்இர்வின், கேரள அரசின் பிரதிநிதிகளாக நீர்பாசனத்துறை செயற்பொறியாளர் அருண்ஜேக்கப், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முல்லைப்பெரியாறு அணை, பேபி அணை, கேலரி, ‌ஷட்டர் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, கசிவு குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.60 அடி. வரத்து 1561 கன அடி. திறப்பு 1450 கன அடி. நீர் இருப்பு 3748 மி.கன அடி.

வைகை அணையின் நீர்மட்டம் 59.82 அடி. வரத்து 1344 கன அடி. திறப்பு 660 கன அடி. இருப்பு 3569 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.10 அடி. வரத்து 47 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.47 அடியில் உள்ளது. இதனால் அணைக்கு வரும் 66 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 100.33 மி.கன அடியாக உள்ளது.
Tags:    

Similar News