செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணை நீர்மட்டம் 118 அடியாக சரிவு

Published On 2019-10-03 04:11 GMT   |   Update On 2019-10-03 04:11 GMT
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நேற்று 119.24 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 118.82 அடியானது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

நேற்று 6 ஆயிரத்து 334 கன அடியாக இருந்த நீர்வரத்து இனறு மேலும் சரிந்து 5 ஆயிரத்து 269 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் 12 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து இரு மடங்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதால் அணையின் நீர்மட்டம்சரிந்து வருகிறது.

நேற்று 119.24 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 118.82 அடியானது.

இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் குறையும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News