செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்- முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்

Published On 2019-09-30 09:18 GMT   |   Update On 2019-09-30 09:18 GMT
சென்னை கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் ரூ.348 கோடி செலவில் கட்டப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.

சென்னை:

சென்னை கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் ரூ.348 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நாளை (1-ந்தேதி) காலை நடக்கிறது.

முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.

அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், வாரிய தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

கொடுங்கையூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் 3-ம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு மையமாக தொடங்கப்பட்டுள்ள இந்த சுத்திகரிப்பு மையம் மூலமாக தினமும் 45 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய முடியும்.

Tags:    

Similar News