செய்திகள்
சென்னை மாநகர பஸ்

5 புதிய வழித்தடங்களில் மாநகர பஸ்கள் இயக்கம்

Published On 2019-09-24 10:16 GMT   |   Update On 2019-09-24 10:16 GMT
வேளச்சேரி-வண்டலூர் பூங்கா, வடபழனி-கேளம்பாக்கம் உள்ளிட்ட 5 புதிய வழித்தடங்களில் மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை:

மாநகர பஸ்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது.

இதையடுத்து பயணிகளின் தேவை குறித்து மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் ஆய்வு செய்தது. பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தற்போது புதிதாக 5 வழித்தடங்களில் மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வேளச்சேரி- வண்டலூர் பூங்கா வழித்தடத்தில் 91சி, குன்றத்தூர்-கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் 66ஜி, வடபழனி-கேளம்பாக்கம் வழித்தடத்தில் 570வி, சோழிங்கநல்லூர்-வண்டலூர் வழித்தடத்தில் 19வி, கண்டிகை- கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் 55கே என 5 வழித்தடங்களில் புதிதாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம்- கேளம்பாக்கம் வழித்தடத்தில் தடம் எண் 570 எஸ்-ல் இயக்கப்பட்டு வந்த 15 பஸ்கள் 570வி வழித்தடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. பொதுமக்களின் வசதிக்காகவும், கோயம்பேட்டில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதே போல் பிராட்வே- கே.கே.நகர் வழித்தடத்தில் இயக்கப்படும் தடம் எண் 11ஜி பஸ்களில் ஒருசில பஸ்கள் அய்யப்பன்தாங்கல் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளன.

மேலும் ஐ.டி. நிறுவனங்கள் உள்ள பகுதி மற்றும் ஜி.எஸ்.டி. சாலையை எளிதில் அணுகும் வகையில் நாவலூர், சிறுசேரி, மாம்பாக்கம் வழியாக 19வி பஸ்களும், கீரப்பாக்கம், காட்டூர் வழியாக 55கே பஸ்களும் இயக்கப்படுகின்றன. பள்ளிக்கரணை, பல்லாவரம், கீழ்க்கட்டளை உள்ளிட்ட பகுதிகளுக்கும் விரைவில் அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News