செய்திகள்
அமைச்சர் சி.வி.சண்முகம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - அமைச்சர் சி.வி.சண்முகம் அண்ணன் போட்டியா?

Published On 2019-09-23 07:02 GMT   |   Update On 2019-09-23 07:24 GMT
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் போட்டியிடலாம் என்று தெரிய வந்துள்ளது.
விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு அக்டோபர் மாதம் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.வினர் சென்னையில் உள்ள தலைமை கழகத்தில் போட்டி போட்டு விருப்ப மனு வழங்கி வருகிறார்கள்.

முன்னாள் எம்.பி. லட்சுமணன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேலு, காணை ஒன்றிய செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர், வக்கீல் தம்பித்துரை ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர்.

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் போட்டியிடலாம் என்ற பேச்சும் பரவலாக அடிபடுகிறது.



கடந்த முறை விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த தேர்தலில் இந்த தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் 41,428 வாக்குகள் பெற்றிருந்தார்.

பா.ம.க. தங்கள் கூட்டணியில் இருப்பதால் எப்படியும் இந்த தொகுதியை தங்கள் வசம் ஆக்கி விடலாம் என்று அ.தி.மு.க.வினர் வரிந்து கட்டியுள்ளனர். எனவே ஏராளமானோர் போட்டி போட்டு விருப்பமனு கொடுத்து வருகிறார்கள்.

இன்று மாலை 3.30 மணி வரை விருப்ப மனு பெறப்படும். அதன் பின்னர் மனு அளித்தவர்களிடம் கட்சி தலைமை நேர்காணல் நடத்த உள்ளது.

நேர்காணல் முடிந்ததும் இன்றே வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News