செய்திகள்
தீர்ப்பையொட்டி கோர்ட்டு வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததை காணலாம்.

ஆதிகேசவபெருமாள் சிலையில் இருந்த நகைகள் எவ்வளவு? - சிபிசிஐடி போலீசார் தகவல்

Published On 2019-09-20 03:30 GMT   |   Update On 2019-09-20 03:30 GMT
ஆதிகேசவபெருமாள் சிலையில் இருந்த நகைகள் எவ்வளவு? என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.
நாகர்கோவில்:

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சயன கோலத்தில் இருந்த பெருமாள் சிலையில் பழங்காலத்தில் இருந்த மலையாள மொழி ஆவணங்களில் 1,118 தோலாஸ் தங்க நகைகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு தோலாஸ் என்றால் 11.640 கிராம் ஆகும்.

அதன்படி பார்த்தால் 13 கிலோ 13 கிராம் எடையுள்ள தங்க நகைகள் அணிவிக்கப்பட்டு இருந்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். ஆனால் திருட்டு நடந்த காலத்தில் அதில் 6 கிலோவுக்கு மேற்பட்ட நகைகள் கொஞ்சம், கொஞ்சமாக திருட்டு போனபிறகு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அதிகாரிகள் மலையாள மொழியிலான ஆவணத்தை மறைத்து அந்த சிலையில் 7 கிலோ நகைகள்தான் அணிவிக்கப்பட்டு இருந்தது. அவை சரியாக இருக்கிறது என்று சான்றளித்துள்ளனர்.

இதற்கிடையே இந்த திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தும்போது சிலையை ஆய்வு செய்தபோது வெறும் 1,170 கிராம் எடையிலான தங்க நகைகள் மட்டும்தான் இருந்துள்ளது. மற்ற நகைகள் அனைத்தும் திருட்டு போய் இருக்கிறது. அதனால்தான் பெருமாளின் தலையில் அணிவிக்கப்பட்டு இருந்த வைரக்கிரீடம் தங்க நிறத்திலான வெறும் தாளால் ஆன கிரீடமும், உடலில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசத்துக்குப்பதிலாக தங்கமுலாம் பூசப்பட்ட எண்ணெய் டின் தகட்டால் ஆன கவசமும் பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News