செய்திகள்
திருமாவளவன்

இந்தி மொழி விவகாரத்தில் முதலமைச்சர் கருத்து தெரிவிக்க வேண்டும்- திருமாவளவன்

Published On 2019-09-17 07:30 GMT   |   Update On 2019-09-17 07:30 GMT
இந்தி மொழி விவகாரத்தில் தமிழக முதல்வர் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
பொன்னேரி:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீஞ்சூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றில் மத்திய அரசுக்கு பொம்மலாட்ட அரசாக தமிழக அரசு செயல்படுகிறது.

மத்திய அரசின் எந்த நிலைப்பாடாக இருந்தாலும் பிற மாநிலங்களை முந்திக் கொண்டு ஆதரிப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. புதிய கல்விக் கொள்கை ஆதரிக்கும் வகையில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என தமிழக அரசு கூறுகிறது.

கன்னட மொழியே தங்களது மாநிலத்தின் பிரதான மொழி என கர்நாடக முதல்வர் டுவிட்டர் மூலம் பதிவிட்டுள்ள நிலையில் இந்தி மொழி விவகாரத்தில் தமிழக முதல்வர் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.

உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் அவர்களை கைது செய்வது கண்டனத்துக்குரியது. விவசாயத்தை மேம்படுத்த வெளிநாடு செல்வதாக கூறும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளூரில் தங்களது உரிமைக்காக போராடும் விவசாயிகளை கைது செய்வது முரண்பாடானது.

தமிழக அமைச்சர்கள் உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளது என நீண்ட காலமாக கூறி வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News