செய்திகள்
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர்.

கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு 13 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

Published On 2019-09-16 05:02 GMT   |   Update On 2019-09-16 05:02 GMT
கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு இன்று 13 ஆயிரத்து 441 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

தர்மபுரி:

கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு இன்று 13 ஆயிரத்து 441 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

கே.ஆர்.எஸ். அணையின் மொத்த நீர்மட்டமான 124.80 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரத்து 314 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் 10 ஆயிரத்து 441 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 84 அடியாகும். இதில் 83.97 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 926 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

2 அணைகளில் இருந்தும் மொத்தம் 13 ஆயிரத்து 441 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியாக உள்ளது.

Tags:    

Similar News