செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

கவர்னர் கிரண்பேடியின் காணாமல் போன செல்போன்- நொறுங்கிய நிலையில் கண்டுபிடிப்பு

Published On 2019-09-14 09:37 GMT   |   Update On 2019-09-14 09:37 GMT
புதுவை கவர்னர் கிரண்பேடியின் செல்போன் மாயமானதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
புதுவை:

வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூய்மை இந்தியா திட்டப் பணிகள் மற்றும் ஏரி- குளங்களை தூர் வாரும் பணிகளை புதுவை கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்து வருகிறார்.

பின்னர் கவர்னர் கிரண்பேடி விழிப்புணர்வு பயணத்தை தொடங்கி வைத்து அரங்கனூர் வரை சுமார் 3½ கிலோ மீட்டர் தூரம் மாணவர்களுடன் நடந்தே சென்றார்.

விழிப்புணர்வு பயணத்தை முடித்து வைத்து கவர்னர் கிரண்பேடி புறப்பட தயாரான போது, அவரது செல்போன் மாயமாகி போனது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து கவர்னரின் செல்போனை தேடினர். ஆனால் செல்போன் கிடைக்கவில்லை.

இதையடுத்து கவர்னர் கிரண்பேடி அங்கிருக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் கவர்னர் கிரண்பேடி கன்னியகோவில் பகுதியில் உள்ள குப்பை கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கவர்னர் சென்ற பின் போலீசார் செல்போனை தேடியபோது அந்த செல்போன் உடைந்த நிலையில் சாலையோரம் கிடந்ததை போலீசார் கண்டெடுத்தனர். கவர்னர் தவறவிட்ட செல்போன் மீது மாட்டு வண்டி ஏறியதால் அது உடைந்து போனதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News