செய்திகள்
திமுக

சென்னையில் 16-ந் தேதி தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட கூட்டம்

Published On 2019-09-14 08:23 GMT   |   Update On 2019-09-14 08:23 GMT
மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக்கூட்டம் வருகிற 16-ந் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது.

சென்னை:

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக்கூட்டம் வருகிற 16-ந் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும்.

அப்போது உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News