செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது

Published On 2019-09-11 06:26 GMT   |   Update On 2019-09-11 06:26 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.29,072-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் சர்வதேச அம்சங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே கடுமையாக உயர்ந்தது.

2 வாரத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்து, கடந்த 4-ந்தேதி வரலாறு காணாத அளவுக்கு பவுன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது.

இதனால் நகை விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது. அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ளதால் தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் கடந்த 1 வாரமாக தங்கம் விலையில் சிறிது சிறிதாக சரிவு ஏற்பட்டது. கடந்த 7-ந்தேதி 1 கிராம் ரூ.3,671-க்கும், 1 பவுன் ரூ.29,368-க்கும் விற்பனையானது. 9-ந்தேதி 1 பவுன் ரூ.29,272-க்கும் விற்பனையானது.

நேற்று தங்கம் விலை மேலும் குறைந்து 1 கிராம் ரூ.3649-க்கும், 1 பவுன் ரூ.29,192-க்கும் விற்பனையானது.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை 1 கிராமுக்கு ரூ.15 குறைந்தது. சென்னையில் இன்று 1 கிராம் தங்கம் ரூ.3634-க்கும் 1 பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.29,072-க்கும் விற்பனையானது.

கடந்த 1 வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை 1 பவுனுக்கு ரூ.1048 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று தங்கம் விலை குறைந்த போதிலும் வெள்ளி விலையில் 30 காசுகள் அதிகரித்தது. நேற்று 1 கிராம் ரூ.50.90-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.51.20 ஆக அதிகரித்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து இன்று ரூ.51,200-க்கு விற்பனையானது.
Tags:    

Similar News