செய்திகள்
முக ஸ்டாலின்

15-ந்தேதி அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்

Published On 2019-09-07 05:59 GMT   |   Update On 2019-09-07 05:59 GMT
வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

சென்னை:

வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.


இதையொட்டி சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் விடுத்துள்ள வேண்டுகோளில் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு, மாவட்ட கழக உறுப்பினர்கள், பகுதி வட்ட கழக நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட அனைத்து அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News