செய்திகள்
தங்கம்

பவுன் ரூ.40 ஆயிரத்தை தொடும் நகை- நகை வியாபாரிகள் கணிப்பு

Published On 2019-09-04 07:02 GMT   |   Update On 2019-09-04 07:02 GMT
தங்கம் உயர்ந்து கொண்டே சென்றால் இன்னும் 3 மாதங்களில் ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை எட்டி விடும் என்று நகை வியாபாரிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தங்கம் விலை உயர்வு குறித்து நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயினுலாதீன் கூறியதாவது:-

தங்கம் விலை கடந்த 3 மாதமாக வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இதற்கு 4 காரணங்கள் உள்ளது.

1. அமெரிக்கா - சீனா பொருளாதார வர்த்தக போர் காரணமாக தங்கத்தின் மீது முதலீடு அதிகமாகி விட்டது.

2. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது ஒரு காரணம்.

3. பொருளதார சரிவு காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.

4. ரியல் எஸ்டேட் அதிபர்கள் நிலம் வாங்குவதற்கு பதிலாக தங்க நகைகள் அதிக அளவில் வாங்கி குவிப்பது.

இதனால்தான் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் 3 மாதங்களில் ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை எட்டி விடும்.

தங்கம் விலை ஏறும் போது, சாதாரண, நடுத்தர மக்கள் நகை வாங்க யோசிப்பார்கள். ஆனால் விலை இறங்கவில்லை என்று தெரிந்ததும் வழக்கம் போல் நகை வாங்க தொடங்கி விடுவார்கள்.

எனவே விலை உயர்ந்தாலும் நகை வியாபாரத்தில் பாதிப்பு இல்லை. அதிகமாகவே வியாபாரம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News