செய்திகள்
ராஜேந்திர பாலாஜி

பசுமை பட்டாசு தயாரிப்பால் 1 1/2 கோடி பேர் வாழ்வாதாரம் காக்கப்படும்- ராஜேந்திர பாலாஜி பேட்டி

Published On 2019-08-22 16:14 GMT   |   Update On 2019-08-22 16:14 GMT
பசுமை பட்டாசு தயாரிப்பதன் மூலம் 1 1/2 கோடி தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் காக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
விருதுநகர்:

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பசுமை பட்டாசு தயாரிப்பது தொடர்பாக தனியார் கல்லூரியில் ஆய்வு நடந்து வருகிறது. 85 சதவீதம் பேரியம் நைட்ரேட் தவிர்த்து பட்டாசு தயாரிப்பதால் மாசு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளோம். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, நீரிய அமைப்பின் மூலம் நல்ல முடிவை எடுக்கும். இதன் மூலம் 1 1/2 கோடி பட்டாசு தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் காக்கப்படும். சோதனை முடிந்த பின்பு கலெக்டருடன் கலந்தாய்வு செய்து பசுமை பட்டாசுக்கு உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் பட்டாசு தொழிலாளர்களுக்கு விடிவு காலம் ஏற்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News