செய்திகள்
சிறப்பு பேருந்துகள்

வேளாங்கண்ணியில் பெருவிழா: 25-ந் தேதி முதல் சிறப்பு பேருந்துகள்

Published On 2019-08-22 09:05 GMT   |   Update On 2019-08-22 09:05 GMT
வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவினை முன்னிட்டு, இந்த ஆண்டும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 200 சிறப்பு பேருந்துகள், வருகிற 25-ந் தேதி முதல் திருவிழா நடைபெறும் வரை இயக்கப்படுகிறது.

சென்னை:

அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவினை முன்னிட்டு, இந்த ஆண்டும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னை, பெங்களூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து தேவைக்கேற்ப அதிநவீன மிதவைப் பேருந்துகள், இருக்கை வசதி கொண்ட குளிர்சாதனப் பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

200 சிறப்பு பேருந்துகள், வருகிற 25-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 16 நாட்களுக்கு திருவிழா நடைபெறும் வரை இயக்கப்படுகிறது.

பயணிகளின் வசதிக்காக நடைமுறையில் உள்ள இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News