செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

ஆதாரம் இல்லாமல் சிபிஐ நடவடிக்கை எடுக்காது - கவர்னர் கிரண்பேடி

Published On 2019-08-22 08:06 GMT   |   Update On 2019-08-22 08:06 GMT
ஆதாரம் இல்லாமல் சி.பி.ஐ. எந்தவித நடவடிக்கையும் எடுக்காது என்று ப. சிதம்பரம் கைது விவகாரம் தொடர்பாக புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை அரவிந்தர் ஆசிரமத்திற்கு வந்த கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னரின் அதிகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில்தான் உள்ளது. வரும் செப்டம்பர் 4-ந்தேதி வழக்கு மறு விசாரணைக்கு வருகிறது. அதன் முடிவு வரும் வரை காத்திருப்போம். முன்னாள் உள்துறை அமைச்சராகவும் நிதித்துறை அமைச்சராகவும் ப.சிதம்பரம் பதவி வகித்துள்ளார். ஆதாரம் இல்லாமல் சி.பி.ஐ. எந்தவித நடவடிக்கையும் எடுக்காது என்பது அவருக்கு தெரியும்.



சி.பி.ஐ. கொடுக்கும் ஆதாரங்களை நீதிமன்றம் ஆராய்ந்த பின்னர்தான் ஜாமீன் வழங்கலாமா அல்லது வழங்கக்கூடாதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். இதிலிருந்து வலிமையான பாடத்தை நாம் கற்கிறோம். இந்த பாடம் கற்கும் விவகாரமாக உள்ளது. தலைமை பண்பு என்பது பதவி கிடையாது. அது ஒரு பொறுப்பு.

வெளிப்படைதன்மை, மக்களுக்கான நலன். மக்களுக்கான கணக்கை தொடங்குவது தான் தலைமையின் பணி. தவறு செய்தால் இயற்கை தண்டிக்கும், நன்மை செய்தால் அதற்கான வெகுமதியை இயற்கை தானாகவே வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News