செய்திகள்
போராட்டம்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் 8 கைதிகள் திடீர் உண்ணாவிரத போராட்டம்

Published On 2019-08-20 07:09 GMT   |   Update On 2019-08-20 07:09 GMT
கோவை அரசு ஆஸ்பத்திரியில் 8 கைதிகள் திடீர் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.

கோவை:

கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறை வளாகத்தில் ஒரு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. தினசரி 3 அரசு டாக்டர்கள் அங்கு சென்று கைதிகளுக்கு ஏற்படும் சின்ன பிரச்சினைக்கு சிகிச்சை அளிப்பார்கள். மேல் சிகிச்சை தேவைப்படும் கைதிகள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறைக் கைதிகள் வார்டுக்கு அனுப்ப படுவார்கள்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறைக்கைதிகள் வார்டில் 10 கைதிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்கலாம். தற்போது இங்கு 8 கைதிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரி சிறை கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகள் 8 பேர் டாக்டர்கள் சரியாக வருவது இல்லை. தேவையான சிகிச்சைகளை அளிப்பதில்லை என கூறி நேற்று மாலை முதல் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.

நேற்று இரவு இவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட மறுத்து விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News