செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

தேனி மாவட்டத்தில் விரைவில் சட்டக்கல்லூரி- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Published On 2019-08-19 10:19 GMT   |   Update On 2019-08-19 10:19 GMT
தேனி மாவட்டத்தில் விரைவில் அரசு சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.

தேனி:

தேனி மாவட்டத்தில் உழைக்கும் மகளிருக்கான இருசக்கர வாகனம் மானிய விலையில் வழங்கும் விதமாக அம்மா இருசக்கர வாகனம் திட்டத்தின் கீழ் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்குட்பட்ட 702 மகளிருக்கு ரூபாய் 1 கோடியே 75 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் இருசக்கர வாகனங்களையும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக 42 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.1 கோடியே 81 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நிதி உதவிகளையும், 177 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் நடைபெற்ற விழாவில் வழங்கினார். 

இதில் பயனாளிகள் கலந்து கொண்டு இருசக்கர வாகன உதவியையும் நலத்திட்ட உதவிகளையும் பெற்று கொண்டனர். விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், வீடில்லா ஏழைகளுக்கு கான்கிரிட் வீடுகள் அமைத்து தரப்படும். தேனி மாவட்டத்தில் விரைவில் அரசு சட்டக்கல்லூரி அமைக்கப்படும். தேனி மாவட்டம் கல்வியில் முதன்மை மாவட்டமாக திகழும். இரு சக்கர வாகனம் வாங்கும் மகளிர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News