செய்திகள்
நீலநிறத்தில் மின்னிய கடல் அலைகள்

திருவான்மியூரில் நீலநிறத்தில் மின்னிய கடல் அலைகள்

Published On 2019-08-19 09:13 GMT   |   Update On 2019-08-19 09:13 GMT
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர் கடல் அலைகள் நீலநிறத்தில் மின்னிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை:

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், ஈச்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு கடல் அலைகள் நீல நிறமாக மாறியதாக தகவல் பரவியது.

இதனால் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நள்ளிரவில் கடற்கரை பகுதிகளில் திரண்டனர். திருவான்மியூர் கடற்கரையில் திரண்ட வாலிபர்கள் கடல் அலைகள் நிறம் மாறி இருப்பதை கண்டு ரசித்தனர். பின்னர் தங்களது செல்போன் மற்றும் காமிராக்களில் படம் எடுத்து பகிர்ந்தனர்.

மேலும் அந்த காட்சிகளை பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பினர்.

கடல் அலைகள் திடீரென நிறம் மாறுவதற்கு காரணம், ஒரு வகை பாசி என கூறப்படுகிறது. அந்த பாசியை சாப்பிட வரும் சிறிய வகை மீன்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள இப்படி ஒளியை உமிழ்வதற்கு வாய்ப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பெய்த மழையால் நைட்ரஜன் கலந்த மாசு கடலில் கலந்து இருக்கலாம் என்றும், அதன் காரணமாக கடல் அலைகள் இவ்வாறு மின்னி இருக்கலாம் என்றும் தேசிய கடலோர ஆய்வு மையத்தினர் கூறுகின்றனர். இது தொடர்பாக கடலோரஆய்வு மைய அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர்.

Tags:    

Similar News