செய்திகள்
திருச்சி விமான நிலையம்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

Published On 2019-08-18 13:33 GMT   |   Update On 2019-08-18 13:33 GMT
திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே.கே.நகர்:

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று மலிண்டோ விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுபிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மலேசியாவை சேர்ந்த ரோஸிஆனா அருணாச்சலம்(வயது 39) என்ற பயணி உடலில் மறைத்து செயின் வடிவில் எடுத்து வந்த ரூ. 12.14 லட்சம் மதிப்புள்ள 326 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதேபோன்று சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு நேற்று இரவு ஸ்குட் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்தியவான் நுண்ணறிவு பிரிவுஅதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த ரூ. 8.63 லட்சம் மதிப்புள்ள செயின் வடிவிலான 229.5 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து திருநாவுக்கரசுவிடம் விசாரணை நடந்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் ரூ.20.77 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பிடிப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்வது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News