செய்திகள்
தேசிய கொடியை ஏற்றிய கலெக்டர் மகேஸ்வரி

காஞ்சிபுரம்-திருவள்ளூரில் சுதந்திரதின விழா

Published On 2019-08-15 07:37 GMT   |   Update On 2019-08-15 07:37 GMT
73-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கலெக்டர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
திருவள்ளூர்:

சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் மகேஸ்வரி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மூவண்ண பலூன்கள் மற்றும் சமாதான புறாக்களை பறக்கவிட்டார்.

இதைத்தொடர்ந்து, காவல் துறையினர், தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்தும், பரிசுகள் வழங்கியும் கலெக்டர் மகேஸ்வரி கவுரவித்தார்.

வருவாய் துறை, முன்னாள் படை வீரர் நலத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலத்துறை, தாட்கோ, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, வருவாய்த்துறை சமூக பாதுகாப்பு திட்டம் ஆகிய துறைகள் மூலம் மொத்தம் 126 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 35 லட்சத்து 94 ஆயிரத்து 918 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலுர்களுக்கு சான்றுகளை கலெக்டர் மகேஸ்வரி வழங்கினார். பின்னர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், வருவாய் அலுவலர் முத்துசாமி, திட்ட இயக்குனர் லோகநாயகி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தில்லைநடராஜன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் தயாளன், வட்டாட்சியர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்கள், போலீஸ் நிலையங்கள், நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலக வளாகங்களிலும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மைதானத்தில் மாவட்ட கலெக்டர் பொன்னையா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News