செய்திகள்
கபினி அணை

கபினி அணையில் இன்று 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

Published On 2019-08-12 07:31 GMT   |   Update On 2019-08-12 07:31 GMT
கபினி அணையில் இருந்து இன்று காலை 9 மணி முதல் காவிரியில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

மேட்டூர்:

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்ததால் கர்நாடகத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து பலமடங்கு அதிகரித்தது. இதனால் அந்த அணை வேகமாக நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த அணையில் இருந்து 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

வயநாடு பகுதியில் மழை குறைந்ததால் கபினி அணைக்கு வரும் நீர்வரத்து அடியோடு சரிந்தது. நேற்று இரவு முதல் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு திடீரென்று நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 9 மணி முதல் கபினியில் இருந்து காவிரியில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மற்றொரு அணையான கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து 1 லட்சத்து 51ஆயிரம் கனஅடி தண்ணீர் இன்று காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. மொத்தம் 1 லட்சத்து 71 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.

Tags:    

Similar News