செய்திகள்
சென்னை சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர்.

ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் இளங்கோவன் கோர்ட்டில் ஆஜர்

Published On 2019-07-23 06:49 GMT   |   Update On 2019-07-23 06:49 GMT
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த அவதூறு வழக்கில் இளங்கோவன் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சென்னை:

தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் மீது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

அந்த இரு வழக்குகளும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் கோர்ட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று ஆஜர் ஆனார்.

அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணையை 29-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

கோர்ட்டுக்கு வந்த இளங்கோவனை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரங்கபாஷ்யம், ராயபுரம் மனோகர், பால முருகன், நாஞ்சில் பிரசாத், மணிப்பால், சூளை ராஜேந்திரன், கடல் தமிழ்வாணன், மயிலை அசோக், ஏழுமலை உள்பட பலர் வரவேற்றனர்.

Tags:    

Similar News