செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மைய அலுவலகம்

தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

Published On 2019-07-22 15:32 GMT   |   Update On 2019-07-22 15:32 GMT
தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

வெப்ப சலனம் காராணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.

கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி உள்பட சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று  ஒரே நாளில் மேலும் 3 அடி உயர்ந்தது.



சென்னையிலும் சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்தது. இந்நிலையில் வட தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  இன்று (22-ம் தேதி) லேசான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக,  வட தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டத்துக்குட்பட்ட இடங்களில் இன்று கனமழை அல்லது மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கண்ட பகுதிகளில் நாளையும் (23-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புண்டு.

சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இவ்விரு நாட்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News