செய்திகள்
கைது

திண்டுக்கல் அருகே மனைவியை கொன்று நாடகமாடிய வியாபாரி கைது

Published On 2019-07-22 10:33 GMT   |   Update On 2019-07-22 10:33 GMT
திண்டுக்கல் அருகே கள்ளக்காதல் தகராறில் மனைவியை கொன்று நாடகமாடிய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள காமலாபுரத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜோசப். மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கிரேசி மேரி. (வயது 34). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிரேசி மேரி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து அம்மைய நாயக்கனூர் போலீசில் கிரேசி மேரியின் தந்தை ஜேசுராஜ் புகார் அளித்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் கிரேசியின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அவரது கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் நிலக்கோட்டை டி.எஸ்.பி. பாலகுமார் தலைமையில் அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஜான் ஜோசப் தனது மனைவியை கொலை செய்ததை ஒத்துக் கொண்டார்.

அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கிரேசி மேரிக்கும் எனது உறவினர் ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது. இதனை நான் பல முறை கண்டித்து வந்தேன். ஆனால் என் மனைவி கேட்கவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்தேன். சம்பவத்தன்றும் கிரேசி மேரி அந்த வாலிபருடன் பேசி வந்தார்.

இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் நான் அவரை அடித்து கீழே தள்ளி விட்டேன். இதில் அவர் மயக்கமடைந்து விழுந்தார். பின்னர் அருகில் இருந்த சேலையை எடுத்து கிரேசி மேரியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு எனது மளிகை கடைக்கு வந்து விட்டேன். ஆனால் போலீசார் நான் கொலை செய்ததை கண்டு பிடித்து விட்டனர் என்று தெரிவித்தார். இதனையடுத்து ஜான் ஜோசப்பை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கள்ளத் தொடர்பால் மனைவியை கொன்ற ஜான் ஜோசப் சிறைக்கு சென்று விட்டார். தற்போது அவர்களது 2 குழந்தைகளும் பெற்றோர் இன்றி தவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News