செய்திகள்
போராட்டம்

பெரம்பூர் ரெயில்வே பணிமனையில் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

Published On 2019-07-19 06:53 GMT   |   Update On 2019-07-19 06:53 GMT
ரெயில்வே துறையை தனியார் மயமாக்கி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பூரில் உள்ள ரெயில்வே பணிமனை முதன்மை மேலாளர் அலுவலகம் முன்பு தென்னக ரெயில்வே எஸ்.சி., எஸ்.டி. தொழிற்சங்கத்தனர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கி வருவதற்கு ரெயில்வே ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

பெரம்பூரில் உள்ள ரெயில்வே பணிமனை முதன்மை மேலாளர் அலுவலகம் முன்பு தென்னக ரெயில்வே எஸ்.சி., எஸ்.டி. தொழிற்சங்கத்தனர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு பொதுச்செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்று தனியார் மயத்தை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

ரெயில்வே துறையில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் அவுட்சோர்சிங் முறையில் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. ரெயில்களையும் தனியார்கள் இயக்க அனுமதித்துள்ளனர். இந்தியாவில் புகழ்பெற்ற ரெயில்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகள் பெரம்பூர், கபூர்தலா, உ.பி. ஆகிய இடங்களில் உள்ளன.

இந்த நிலையில் 2 ஆயிரம் ரெயில்பெட்டிகளை வெளிநாடுகளில் இருந்து வாங்க முடிவு செய்துள்ளனர்.

ரெயில்வேயில் பணியாற்றுபவர்கள் 55 வயதை கடந்தால் அல்லது 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால் கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு செய்துள்ளனர். இந்த தொழிலாளர் விரோத போக்கை வன்மையாக கண்டிக்கிறோம் என்றனர்.
Tags:    

Similar News