செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 22 பேர் குடும்பத்துக்கு நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Published On 2019-07-18 08:29 GMT   |   Update On 2019-07-18 08:29 GMT
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 22 பேர் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:

சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொது நிவாரண நிதி பற்றி அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டம், ஓடத்துறை கிராமத்தைச் சேர்ந்த சிவபாலன்; ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி கிராமத்தைச் சேர்ந்த விஜயராமலிங்கம்; நாமக்கல் மாவட்டம், பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன்; கோயம்புத்தூர் மாவட்டம், அர்த்தநாரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ்; சிவகங்கை மாவட்டம், கல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்; திருவள்ளூர் மாவட்டம், பெருஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மற்றும் தட்சணாமூர்த்தி; தஞ்சாவூர் மாவட்டம், மற்றும் நகரத்தைச் சேர்ந்த ரெங்கசாமி; கோயம்புத்தூர் மாவட்டம், மாவுத்தம்பதி கிராமத்தைச் சேர்ந்த சுவாதி ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பொன்னவராயன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி செண்பக வள்ளி என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், காத்தாட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர் பள்ளி சென்று விட்டு வீடு திரும்பும் போது, பலத்த காற்றின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், மணக்கரம்பை கிராமத்தைச் சேர்ந்த தம்பூட்டு (எ) திருமுருகன்; கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் கிராமத்தைச் சேர்ந்த வள்ளிநாயகம் மகன் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி மீனாட்சி செல்வி; சென்னை மாவட்டம், முகலிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் மோகன்; ஈரோடு மாவட்டம், வைரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வக்குமார்; ஈரோடு மாவட்டம், மாதம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி; திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன்; திருநெல்வேலி மாவட்டம், செண்பகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருத்தப்பாண்டியன்; ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுகுறி கிராமத்தைச் சேர்ந்த வேணுகுமார் திருவள்ளுர் பழவேற்காடு கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, தலையில் பலத்த காயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஆலம்பள்ளம், வாடியக்காடு பகுதியைச் சேர்ந்த தருண் நாய் கடித்து, பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 22 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிவபாலன், விஜய ராமலிங்கம், முத்து கிருஷ்ணன், காளிதாஸ், ராதா கிருஷ்ணன், விஸ்வநாதன், தட்சணாமூர்த்தி, ரெங்கசாமி, சுவாதி மற்றும் பாம்பு கடித்து உயிரிழந்த செண்பகவள்ளி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3லட்சம் முதல்- அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்தும்;

சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த ராஜன் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும்; சாலை விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் மற்றும் அவருடைய மனைவி மீனாட்சி செல்வி, மணிகண்டன், மோகன், தம்பூட்டு என்கிற திருமுருகன், பார்த்திபன், பழனிசாமி, பார்த்திபன், கருத்தப்பாண்டியன்; கடலில் மூழ்கி உயிரிழந்த வேணுகுமார், நாய் கடித்து உயிரிழந்த தருண் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News