செய்திகள்
மெட்ரோ ரெயில்

மெட்ரோ ரெயிலில் தினமும் 1 லட்சம் பேர் பயணம்

Published On 2019-07-10 06:56 GMT   |   Update On 2019-07-10 06:56 GMT
மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. மெட்ரோ ரெயிலில் சராசரியாக தினமும் 1 லட்சம் பேர் பயணம் செய்து வருகிறார்கள்.
சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் முதல் கட்டமாக 45 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டு பயணிகள் சேவை நடந்து வருகிறது.

தற்போது வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 2-வது கட்டமாக மாதவரம்-சிறுசேரி வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. மெட்ரோ ரெயிலில் சராசரியாக தினமும் 1 லட்சம் பேர் பயணம் செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மெட்ரோ ரெயில் பயணத்தை தினமும் அலுவலகம் செல்வோர் பெரிதும் விரும்புகிறார்கள். தனியார் நிறுவன ஊழியர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என பல ஆயிரம் பேர் தினமும் பயணம் செய்து வருகிறார்கள்.

விமான பயணிகள் மற்றும் விமான நிலையத்துக்கு செல்வோருக்கு மெட்ரோ ரெயில் பெரிதும் உதவிகரமாக உள்ளது. விமான நிலையத்துக்கு தினமும் 9 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயில் மூலம் வந்து செல்கிறார்கள். சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு தினமும் 8,500 பேர் வந்து செல்கிறார்கள். திருமங்கலம் ரெயில் நிலையத்துக்கு 7500 பேர் தினமும் வந்து செல்கிறார்கள்.

வார வேலை நாட்களில் தினமும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் சராசரியாக 95 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 60 ஆயிரம் பேர் சராசரியாக பயணம் செய்து வருகிறார்கள். ஜூன் மாதம் இறுதியில் சராசரியாக 1 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News