செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

மறைந்தவர்கள் பெயரை உச்சரிக்கலாமா? - அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி

Published On 2019-07-09 07:43 GMT   |   Update On 2019-07-09 07:43 GMT
தமிழக சட்டசபையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும் போது, மறைந்த தலைவர்கள் பெயரை உச்சரிக்கலாமா? என்று கேள்வியெழுப்பினார்.
சென்னை:

சட்டசபையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு பிரச்சனையை கிளப்பினார். அப்போது அவர் மறைந்த தலைவர்கள் பெயரை சட்டசபையில் யாரும் குறிப்பிடுவது இல்லை. அவ்வாறு குறிப்பிடுவது அவர்களை அவமதிப்பதாக இருக்கும்.

எதிர்க்கட்சி தலைவர் நாங்கள் உயிருக்கு மேலாக மதிக்கும் அம்மாவின் பெயரை உச்சரிப்பது சரியா? என்றார்.

இதற்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் பேசினார். நான் பெரும்பாலும் சட்டசபையில் பேசும்போது மறைந்த முதல்-அமைச்சர் அம்மையாரின் பெயரை குறிப்பிடுவதை தவிர்த்திருக்கிறேன். சில நேரங்களில் பெயரை குறிப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. மறைந்த தலைவர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர். போன்றோரின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. தவிர்க்க முடியாத இடங்களில் பெயரை குறிப்பிடுவதில் எந்த தவறும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News