செய்திகள்
நிர்மலாதேவி

நிர்மலாதேவி விவகாரம்- சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Published On 2019-07-08 10:01 GMT   |   Update On 2019-07-08 10:01 GMT
நிர்மலாதேவி வழக்கு தொடர்பான புகாரை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை:

மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் பேசிய அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி தற்போது கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.



ஆனால், சிபிசிஐடி வசமுள்ள இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மாணவிகளை பாலியல் பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் இவ்வழக்கில், யாருக்காக பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசினார்? என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவில்லை என்றும், எனவே, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கூறியிருந்தார்.

இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் இன்றுடன் முடிவடைந்தன. இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News