செய்திகள்
உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி

பிளஸ்- 2 மாணவியை கர்ப்பமாக்கிய அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது

Published On 2019-07-07 13:19 GMT   |   Update On 2019-07-07 13:19 GMT
சேலம் அருகே பிளஸ்- 2 மாணவியை கர்ப்பமாக்கிய அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

சேலம்:

சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் அரசு பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவி ஒருவரை உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி அவர் சக தோழிகளிடம் தெரிவித்தார். அவர்கள், பள்ளியில் வேலை பார்க்கும் மற்ற ஆசிரியர்களிடம் தெரிவிக்க மாணவி கர்ப்பமான வி‌ஷயம் அம்பலத்துக்கு வந்தது.

இது தொடர்பாக தகவல் அறிந்த கல்வி துறை அதிகாரிகளும், கொண்டலாம்பட்டி போலீசாரும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஆட்டையாம்பட்டி வேம்படி தாளம் பகுதியைச்சேர்ந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியை கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரினபேரில் உதவி தலைமையாசிரியர் பாலாஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் புஷ்பராணி தலைமையிலான போலீசார் பாலாஜியை தேடி வந்தனர்.

ஆனால் அவர் விடுமுறை எடுத்து கொண்டு தலைமறைவாகிவிட்டார். அவரின் உறவினர்களின் வீடுகளில் போலீசார் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அவர் வெளியூர் தப்பிச்சென்றது தெரியவந்தது. அவரை தனிப்படை போலீசார் கைது செய்ய தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று அரியானூர் பஸ்டாப் அருகே ஆசிரியர் பாலாஜி நிற்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்து. உடனே போலீசார் அங்கு சென்று மறைந்திருந்த பாலாஜியை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து பாலாஜியை சேலம் ஜே.எம்.1- கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் மாணவி முக்கியம் என்பதால் அவரை தனிப்படை போலீசார் கண்டுபிடித்து சேலம் அழைத்து வந்தனர். நேற்று மாணவிக்கு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் மருத்துவபரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த மாணவி 4 மாத கர்ப்பம் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை தாயுடன் அனுப்பி வைத்தனர்.

பாலியல் வழக்கில் சிக்கிய உதவி தலைமையாசிரியர் பாலாஜி நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News