செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது

Published On 2019-07-06 07:33 GMT   |   Update On 2019-07-06 07:33 GMT
சென்னையின் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து, ஒரு சவரன் ரூ.26,248-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

கடந்த 2 மாதங்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அவ்வப்போது சற்று குறைந்தாலும் உடனே விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.26 ஆயிரத்து 40 ஆக இருந்தது.

நேற்று காலை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கம் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டது.

இதனால் மாலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 64 ரூபாயும், பவுனுக்கு 512 ரூபாயும் அதிகரித்தது. பவுன் ரூ.26 ஆயிரத்து 248 ஆக இருந்தது.

ஆனால், இன்று பவுனுக்கு ரூ.304 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்து 248 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.38 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,281-க்கு விற்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 600 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.60 ஆகவும் உள்ளது.

இதற்கிடையே மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளதால் தங்கம் விலை பவுன் ரூ.30 ஆயிரத்தை தொடும் என வியாபாரிகள் கருதுகின்றனர்.

இதனால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தும் வாய்ப்பு அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் நடுத்தர வர்க்கத்தினர் தங்க நகைகள் வாங்கும் நிலை குறையும் என்றும் கூறினர்.
Tags:    

Similar News