செய்திகள்
மதுபான கடை

புதுவையில் மதுபான விலை உயருகிறது

Published On 2019-07-06 04:48 GMT   |   Update On 2019-07-06 04:48 GMT
புதுவையில் விற்பனையாளருக்கும், நுகர்வோருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.1 முதல் ரூ. 3 வரை விலை அதிகரிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் அயல்நாட்டு மதுபான வகைகளின் விலை குறைவாகவே உள்ளது. தமிழகத்தை ஒப்பிடும் போது இங்கு 60 சதவீதம் குறைவான விலையிலேயே மதுபானம் விற்கப்படுகிறது. இந்த விலையில் மாற்றம் கொண்டு வர உள்ளோம்.

அதாவது விற்பனையாளருக்கும், நுகர்வோருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.1 முதல் ரூ. 3 வரை விலை அதிகரிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மதுபான விலை உயர்வு, பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News