செய்திகள்

திருவண்ணாமலை அருகே போலி பெண் டாக்டர் கைது

Published On 2019-06-26 06:31 GMT   |   Update On 2019-06-26 06:31 GMT
திருவண்ணாமலை அருகே போலி பெண் டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேட்டவலம்:

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் உரிய படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக திருவண்ணாமலை மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பாண்யடினுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையில் தண்டராம்பட்டு அரசு மருத்துவமனை மருந்தாளுனர் ராஜாராம், வெங்கடேசன் கொண்ட குழுவினர் வேட்டவலம் ராஜாஜி தெருவில் உள்ள ஜெயந்தி (39) என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது அவர் டிப்ளமோ நர்சிங் படித்து முடித்து விட்டு கடந்த 4 வருடங்களாக அலோபதி சிகிச்சை அளிப்பதாகவும், பொதுமக்களுக்கு ஊசி, குளுக்கோஸ் போடுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவரது வீட்டில் போலீசார் மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் அங்கு அலோபதி சிகிச்சை அளிப்பதற்கு பயன்படும் ஊசிகள், குளுக்கோஸ் இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து இணை இயக்குனர் பாண்டியன் வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து ஜெயந்தியை கைது செய்தனர்.

Tags:    

Similar News