செய்திகள்

ரூ.17 கோடி செலவில் கட்டப்பட்ட 11 சேமிப்பு கிடங்குகளை எடப்பாடி பழனிசாமி திறந்தார்

Published On 2019-06-24 07:38 GMT   |   Update On 2019-06-24 07:38 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 17 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 சேமிப்பு கிடங்குகள் மற்றும் 2 மத்திய கூட்டுறவு வங்கி கிளைக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
சென்னை:

பெருந்துறை வடமுகம் வெள்ளோடு கிராமத்தில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள்,

காஞ்சிபுரம் செய்யூர் கிராமத்தில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள்; திண்டுக்கல் பாளையங்கோட்டை கிராமத்தில் 4 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 3000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 சேமிப்புக் கிடங்குகள்.

கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் முத்துப்பேட்டை கிளைக்கு 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடம் மற்றும் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் மருத்துவக் கல்லூரி கிளைக்கு 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடம்; என மொத்தம் 17 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 சேமிப்பு கிடங்குகள் மற்றும் 2 மத்திய கூட்டுறவு வங்கி கிளைக் கட்டடங்கள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான 23 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு பட்டியல் எழுத்தர், எடையாளர், காவலர், அலுவலக உதவியாளர், துப்புரவாளர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சார்பில் 2016-17ஆம் ஆண்டிற்கான விடுபட்ட தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான 49 லட்சத்து 91 ஆயிரத்து 475 ரூபாய்க்கான காசோலை மற்றும் 2017-18-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான 2 கோடியே 68 லட்சத்து 89 ஆயிரத்து 935 ரூபாய்க்கான காசோலை என மொத்தம் 3 கோடியே 18 லட்சத்து 81 ஆயிரத்து 410 ரூபாய்க்கான காசோலைகளை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் காமராஜ் இன்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.

மேலும் வேலூர் பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், பேர்ணாம்பட்டு ஓங்குப்பம் சாலையில் 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பருவக்குடி வேம்பார் ராமனூத்து சாலையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் மற்றும் புதூர் ஊராட்சி ஒன்றியம், மாவிலோடை சாலையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் என மொத்தம் 4 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் மற்றும் 3 உயர்மட்ட பாலங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

கோவை கிணத்துக்கடவில் 60 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இப்புதிய சார் கருவூலத்தில், கிணத்துக்கடவு வட்டம் தொடர்புடைய பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் பட்டியல்கள் ஏற்பளிக்கவும், ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான வசதிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் சேமபாதுகாப்பு பொருட்களை பாதுகாக்கும் காப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சிகளில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ, காமராஜ், கே.சி. வீரமணி, நிலோபர் கபில், பென்ஜமின், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News