செய்திகள்

எண்ணூரில் ரவுடி கொலையில் 6 பேர் கைது

Published On 2019-06-23 09:29 GMT   |   Update On 2019-06-23 09:29 GMT
எண்ணூரில் ரவுடி கொலையில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூர்:

எண்ணூர் சுனாமி குடியிருப்பு 53-வது பிளாக்கை சேர்ந்தவர் கருப்பு பாண்டியன் (வயது 33). ரவுடி.

நேற்று மதியம் அவர் சாப்பிட்டுவிட்டு காற்றுக்காக வீட்டு வாசலில் நின்றார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் பாண்டியனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். உயிர் தப்ப வீட்டுக்குள் புகுந்த பாண்டியனை மனைவி கண் எதிரேயே கொடூரமாக வெட்டி கொன்று விட்டு கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவம் எண்ணூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளை பிடிக்க எண்ணூர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய திருவொற்றியூரை சேர்ந்த கங்காதரன், மோகன்ராஜ், பிரபாகர், அருண்ராஜ் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மோகன், சரண் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் கடந்த 2013-ம் ஆண்டு கொலையுண்ட கேட்டு சுப்பிரமணியனின் கொலைக்கு பழிக்குப்பழியாக பாண்டியன் தீர்த்துக்கட்டப்பட்டு இருப்பது தெரிந்தது. கேட்டு சுப்பிரமணியன் கொலையில் பாண்டியன் முக்கிய குற்றவாளி ஆவார்.

இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதமும் பாண்டியனை மர்ம கும்பல் வெட்டி கொல்ல முயன்று உள்ளனர். அப்போது லேசான காயத்துடன் பாண்டியன் தப்பினார். தற்போது அவரை வீட்டுக்குள் புகுந்து கொலை செய்துவிட்டனர்.

இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்று கைதான வர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News