செய்திகள்

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சாரல் மழை

Published On 2019-06-23 06:13 GMT   |   Update On 2019-06-23 06:14 GMT
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் வெப்பம் குறைந்து சாரல் மழை பெய்து வருகிறது.

கூடலூர்:

தென் மேற்கு பருவமழை தாமதமானதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக நெல் சாகுபடிக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. மேலும் குடிநீருக்காகவும் பொதுமக்கள் அலையும் நிலை ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் மழை தொடர்ந்து போக்கு காட்டியே வருகிறது. 2 நாட்களாக சாரல் மழை தொடர்ந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 112.10 அடியாக உள்ளது. 193 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர் மட்டம் 31.76 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 35.90 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 79.21 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 11, தேக்கடி 13.8, கூடலூர் 1.5, சண்முகாநதி அணை 1, உத்தமபாளையம் 1.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் தேனி மாவட்டத்தின் பிறகு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதால் குடிநீர் தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News