செய்திகள்
துணை மின் நிலையங்களை முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

18 மாவட்டங்களில் 42 துணை மின் நிலையம்- முதலமைச்சர் திறந்து வைத்தார்

Published On 2019-06-22 07:38 GMT   |   Update On 2019-06-22 10:47 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 18 மாவட்டங்களில் 211 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 42 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 18 மாவட்டங்களில் 211 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 42 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார்.

மேலும் ஈரோடு மாவட்டம் அத்தாணியில் ரூ.8 கோடியே 17 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 110/22 கி.வோ.துணை மின் நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

சமூக பாதுகாப்பு துறை சார்பில் மதுரை அரசினர் கூர் நோக்கு இல்ல வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சிறுவர் சிறுமியருக்கான கூர் நோக்கு இல்ல கட்டிடங்கள், புனரமைக்கப்பட்ட இளைஞர் நீதி குழும கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.

மோட்டார் வாகன பராமரிப்புத் துறை சார்பில் மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு தானியங்கி பணிமனைகளில் அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளித்திடும் வகையில் 1 கோடியே 11 லட்சம்ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களையும் அவர் திறந்து வைத்தார்.
Tags:    

Similar News